அணு ஆபத்தின் எதிரொலி: ஈரானை கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப்-ஸ்டார்மர் (Iran) ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்கக்கூடாது என ஸ்டார்மரும் (Keir Starmer) ட்ரம்பும் (Donald Trump) உறுதியாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய (United Kingdom) பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க (United States) ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப்பும் தொலைபேசியில் உரையாடிய போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய மோசமான நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஈரான்-அமெரிக்காவின் கடும் மோதல்: பதிலடி அச்சத்தால் பதற்றத்தில் உலகம்

ஈரானின் அணுசக்தி

ஈரானின் அணுசக்தி திட்டத்தால் சர்வதேச பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து ஏற்படும் எனவும் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அணு ஆபத்தின் எதிரொலி: ஈரானை கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப்-ஸ்டார்மர் | Trump Starmer S Resolution On Iran

அமெரிக்காவின் சுமார் 125 எண்ணிக்கையிலான B-2 விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை நேற்று (22) காலை தாக்கின.

நிரந்தர தீர்வு 

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்தின் அச்சுறுத்தலைக் குறைக்க ட்ரம்ப் மேற்கொண்ட குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் ட்ரம்ப் பிரதமர் ஸ்டார்மருடன் உரையாடியுள்ளார்.

அணு ஆபத்தின் எதிரொலி: ஈரானை கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப்-ஸ்டார்மர் | Trump Starmer S Resolution On Iran

இதற்கு மத்தியில், ஈரானை அணு ஆயுதத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் இருவரும் ஒரு தீர்மானத்தை நிலைக்கொண்டுள்ளனர்.

அத்துடன், இந்த போர்பதற்றத்திற்கு நிரந்தர தீர்வினை விரைவில் பெற ஈரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இதன்போது ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments