ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இலங்கைக்கு வந்தடைந்தார்.

ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk)  ஜூன் 26 வரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வந்தடைந்தார் ஐ.நா. ஆணையாளர் | Un Rights Chief Volker T Rk Arrives In Sri Lanka

விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

மேலும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றம் சுற்றுலா அமைச்சர், பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *