பாகம் மூன்றின் பதினொராவது தொடர்

இதே காலத்தில்தான் கட்டுப்பாட்டை மீறியதற்காக இரு போராளிகளுக்கு சாவெறுப்பு வழங்கப்பட்டது.

முன்னர் சண்டைக்கு போய்க் கொண்டு இருக்கும்  போது தளபதி தியாகு அவர்கள் பின்னால் எடுக்கப்பட்டார் எனக் குறிப்பிட்டேன். இவருக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்  (இவர்தான் போராளி தியாகு),கட்டுப்பாடான இயக்கம், ஒழுக்கமான போராளிகள் என்று எமது மக்களும் சரி, வெளிநாடுகளும் சரி இந்தப் பெயரை உச்சரிப்பதற்கு எமது அமைப்பின் கட்டுப்பாடுகளும் அதைக்கடைப் பிடித்தமையால்தான் அந்த நல்ல பெயர் எமது அமைப்பிற்குக் கிடைத்தது. அமைப்பில்  இருந்த நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களில்  தவறு செய்தது உறுதிப் படுத்தப்பட்டால் அவர்களுக்கு சாவொறுப்பு வழங்கப்பபடுவது உறுதி.கனிசமான போராளிகள் தவறு விட்டுள்ளோம் என்பதை உணர்ந்து தாங்களே தற்கொலை செய்துகொண்ட உறுப்பினர்களும் அதிகம் என்பதை தெரிவிப்பதோடு இவருக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களே தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பாளராகவும்  மற்றும்1- 4 போர் பொறுப்பாளராகவும் இருந்தார். இவர்தான்இந்தியாஇராணுவத்தின் முற்றுயை உடைத்து தலைவரைப் பாதுகாப்பாக மணலாறுக் காட்டிற்குக் கொண்டு சென்றார்.  என்பதை முன்னர் குறிப்பட்டுள்ளேன்; இவர் இந்திய இராணுவத்தின் சண்டையின் போது 03/03/1988 அன்று வீரச்சாவு அடைந்தார். அதற்குப் பிறகு தளபதி தியாகு அவர்களைத் தலைவர் இந்த வெற்றிடத்திற்குப்  பொறுப்பாக நியமித்தார்.இந்திய  இராணுவம் எமது மண்ணில் இருந்த காலம் இது ஒரு இருண்ட காலம் என தலைவர் அவர்களால் வரணிக்கப்பட்ட நாட்கள்

விடுதலை புலிகள் என அப்போது காட்டிக்கொடுக்கும் முகமூடிகள் ஒரு தடவை தலையாட்டினால் காணும் அவர்கள் அடித்தே அந்த இளைஞனை துடிதுடிக்கத்துடிக்ககொலை செய்து விடுவார்கள்.
இது ஒன்றல்ல பல நூறு சம்பவங்கள் நடந்தன. இந்தியா இராணுவம் எமது மண்ணில் இருந்த காலம் உயிரோடு பிடிபடக்கூடாது என்பதற்காக சுமார் 300ற்கு மேற்பட்ட போராளிகள் குப்பி கடித்து வீரச்சாவு அடைந்தார்கள். அப்படி இருந்தும் எமக்கும், தமிழகத்திற்கும் உரிய உறவு சிறந்த முறையில் இருந்தது. காயப்பட்ட போராளிகளை இந்தியாவிற்கு அனுப்புவதில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் தமிழீழம் கொண்டு வருவதற்கும் அந்த உறவு சிறந்த முறையில் பேணப் பட்டது.


விடுதலைப் புலிகள் மீதான போரை தமிழக மக்களான தமிழர்கள் அதைச் சிறிதளவும் விரும்பவில்லை அது தான் அந்த உறவு நீடித்தற்கான பின்னணிக் காரணியாகயிருந்தது. அதே காலப் பகுதியில்தான் யாழ்பாணம் சாவகச் சேரியைச் சேர்ந்த தளபதி தியாகு அவரின் தங்கையாரும் எமது விடுதலை இயக்கத்தில் ஒரு சிறந்த போராளியாக இருந்தார்.அவளின் பெயர் கப்டன் அஜித்தா


தளபதி தியாகு தலைவரின் மேற்பாதுப்பு சிறப்பு அணிப் போராளிகளுக்கான பொறுப்பாளராகயிருந்தார்.(இவர் தான் சாவொறுப்பு வழங்கப்பட்ட தியாகு)அப்பொழுது வன்னிக் காட்டிற்குள் பல பாசறைகள் இருந்தன. குறிப்பாக நீதிதேவன், புனிதபூமி, அமுதகானம், உதயபீடம்,  நாசகாரி,  கைலமலை இதில் புனிதபூமி என்பது தலைவரின்  பாதுகாப்பு முகாமாக இருந்தது. நீதிதேவன் என்பது விசாரணை முகாமாகயிருந்தது. அதற்கு தளபதி கேணல் சங்கர் அவர்களே பொறுப்பாக இருந்தார். அங்கே செல்பவர்கள் திரும்பி வருவது என்றால் நூற்றிற்கு ஒருதராகத்தான் இருக்கும். அங்கே சென்றால் அவர்களிற்கு முதலில் விசாரணை  நடக்கும் அடுத்து சாவொறுப்பு வழங்கப்படும்.


இதுதான் அங்கே நடக்கும் உண்மையாகவிருந்தது. இதேகாலம் தான் தளபதி தியாகு புனிதபூமியில் தலைவரின்  பாதுப்பு முகாமிற்குப் பொறுப்பாக இருந்தார். அப்பொழுது அருகில்  பெண் போராளிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரான போராளி யூலியா வயித்துவலியெனத் தமிழீழத்திலிருந்து தமிழகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.  அங்கே அவர் சென்றதும்  மருத்துவர்கள் அவரைச் சோதனை  செய்தபோது இயக்கம் சிறிதளவும் கூட நினைத்துப் பார்க்காத ஒரு பாரியதவறு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர் திரும்பவும் வன்னிக்கு அனுப்பப்பட்டார்.


கேணல் சங்கர் அண்ணை அவர்கள் இருவரையும்  தனித்தனியாக விசாரித்து உண்மையை அறிந்து கொண்டார். தியாகுவும் அந்தப் பெண் போராளியும் தவறான முறையில் நடந்ததுதான் அந்தப் பரபரப்பான செய்தியாக போராளிகளுக்குத் தெரியவந்தது. பின் போராளியான புங்குடு தீவைச் சேர்ந்த யூலியா அவர்களும் பொறுப்பாளராகயிருந்த போராளி தியாகு அவர்களும் விசாரணை முடிந்த பின் தனிமைப்படுத்தி தடுப்பில் வைக்கப் பட்டிருந்தார்கள்.  தியாகு அண்ணை அப்பொழுது நீதிதேவனில் தடுத்து வைக்கப்பட்டுயிருந்தார். அடுத்து பெண் போராளி யூலியா அவர்கள் பெண் போராளிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுயிருந்தார். தொடர்ந்து தளபதி தியாகு செய்த தலைவரின் பாதுகாப்பு பொறுப்பு என்ற உயர் பதவியும் 1- 4 பொறுப்பாளர் என்ற  பதவியும் பிரிகேடியர் சொர்ணம் அவர்களிற்கு தலைவரால் வழங்கப்பட்டது.




அடுத்து தலைவரின் அனுமதியுடன் பொறுப்பாளர் ஜோகரெத்தினம் யோகி அவர்களால் 100 உயர்நிலை போராளிகளிடம் ஒரு கருத்துக் கணிப்பை வைத்தார் . இவர்கள் இருவருக்கும் மரணதண்டனை வழங்குவதா? அல்லது இருவரையும் சேர்த்து வைப்பதா? இதுதான் திரு. யோகி அவர்களால் போராளிகளிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். அதில் தியாகுவின் தங்கை கப்டன் அஜீத்தா உட்பட லெப். கேணல் அப்பையா அண்ணை மரணதண்டனை வழங்கவேண்டும் என தனது கருத்தை முன்வைத்தார்கள். அதிலும் அஜித்தா தானே அந்தச் சாவொறுப்பை வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்,

அது தலைவரால் நிராகரிக்கப்பட்டது, இருவருக்கும்  மரணதண்டனை வழங்கினால்தான் மற்றப் போராளிகள் இத்தவறை விடமாட்டார்கள் என்பதே அவரின் வாதமாகயிருந்தது.
லெப். கேணல் ஜெரி உள்ளடங்கலாக 60 போராளிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கினார்கள்.மகேந்தி உட்பட 40 போராளிகள் சேர்த்து வைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள். தலைவர், பொட்டுஅம்மான் இருவரும் இதில்  கலந்து கொள்ளவில்லை. அடுத்து பெரும்பாண்மையை முன்னிலைப்படுத்தி இதே மாதம் வன்னிக்காட்டில் இருந்த நீதிதேவன் முகாமில் வைத்து தளபதி சங்கர் கட்டளையிட  தளபதி சொர்ணம் அருகில் நிக்க மேஜர் றோவட் அவர்கள்அவருக்கான மரணதண்டனையை வழங்கினார்கள்.


அதே காலம் அப்பெண் போராளிக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இது பற்றி தலைவர் சொன்ன விடயம்; “நான் எல்லோருடையே பொக்கெட்டையும் தட்டிப்பார்த்தேன் ஆனால் என்னுடைய பொக்கெட்டை மட்டும் தட்டிப்பார்க்க வில்லை”. அதுதான் என்னுடைய தவறென தனது பிழையை ஒத்துக் கொண்டார்.


இதே காலம் தலைவரால் வழக்கப்பட்ட  “பாமா “என்ற புலி மிகவும் செல்லமாக தலைவரால் வளர்க்கப்பட்டது. போராளிகள் காலையில் உடல் பயிற்சி எடுக்கும் போது அவர்களின் தோளில் ஏறி நிக்கும். தலைவரின் மிகவும் அன்புக்கு உரிய செல்லப் பிராணியாக இந்தப் புலியிருந்தது. அப்பொழுது அதே காலம் புனித பூமியில் நின்ற தேவர் அண்ணெ தெரிவிக்கையில் நான் புனித பூமியில் நின்றபோது புலி உறுமிய சத்தம் கேட்டது.   பின் தலைவர் என்னைக் கூட்டிக்கொண்டு அப்புலியை எனக்குக் காட்டினார்.  அது பலமான மரமொன்றின் அடிப்பாகத்தில் கட்டப்பட்டிருந்தது. அதன் அருகே வயதான பெரியவர் ஒருவர் நின்று புலியைத் தடவிக் கொண்டிருந்தார். இந்த ஐயா யார்? தம்பி என்று கேட்டேன். அதற்கு தம்பி “இவர் லெப் கேணல் நவம் அவர்களின் அப்பா பெருமாள் ஐயா” என எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர்தான் அந்தப் புலியை வளர்த்தார். இவரின் செயல்பாட்டை முன்னர் குறிப்பிட்டுள்ளேன். திடீரென அதற்கு குணம் மாறியதால் திருமால் என்ற போராளியின் தலையை பலமாகக்கடித்தது. திருமாலின் தலையில் பாரிய காயத்தழும்பு இன்றுவரை உள்ளது. அன்றையிலிருந்து புலிகடித்த திருமால் என்று போராளிகள் இவரை அழைப்பார்கள், இதைப் பார்த்து கோபம் அடைந்த தலைவர் உடனே புலிக்கு சாவொறுப்பு வழங்குமாறு மேஜர் றோவட் அவர்கட்கு கட்டளை வழங்கினார். கட்டளையை ஏற்ற றோவட் அவர்கள் புலியை தனது கைத்துப் பாக்கியால் சுட்டு அதற்கான சாவொறுப்பை வழங்கினார்.

இதே காலம்தான் தலைவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இந்தியாவிலிருந்து கொழும்பு வந்து அங்கிருந்து சிறிலங்கா உலங்கு வானூர்தியில் வன்னிக்காடான வசந்த நாட்டிற்குவந்து இறங்கினார்கள். அங்கிருந்து நடந்து புனித பூமிக்குச் சென்று தலைவரோடு வாழ்ந்தார்.

03/01/1989ஆம் ஆண்டு வை.கோபால சாமியின் வன்னிப் பயணமும்

இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்திருந்த காலமது தேசியத்தலைவர் வாழ்ந்த மாணலாற்றுக் காட்டை தரைவழியாகவும், கடல்வழியாகவும் முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த காலம்;

அப்போது விமானத் தாக்குதல்கள் வன்னிக்காட்டை நோக்கிக் கடுமையாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படியான ஆபத்தான யுத்த காலத்தில் தான் திரு .வை.கோ அவர்கள் தமிழீழம் சென்று பிரபாகரனைப் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டார். அப்பொழுது தமிழ்நாட்டில் தங்கியிருந்த பேபி அண்ணாவைச் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்தார். பேபி அண்ணாவும் தலைவருக்கு தெரியப்படுத்த உயிராபத்தான பயணம் விரும்பினால் வரட்டாம் என அவர் தெரியப் படுத்தியிருந்தார். ஆனால் அவர் எடுத்த முடிவில் மாற்றம் இல்லையென தலைவருக்குத் தெரியப்படுத்தினார். தான் ஈழம் செல்லும் போது ஏதாவது நடந்தால் ஒரு கடிதம் எழுதி தனது நண்பர் ஒருதரிடம் கொடுத்ததாகவும் தான் உயிர் இழந்தால் மட்டும் அக்கடிதத்தை கலைஞர் அவர்களிடம் கொடுக்குமாறும் சொல்லி விட்டுத் தனது பயணத்தை ஆரம்பித்தார்;

இவரின் கடல்ப் பயணத்தை போராளி ரகு அவர்களே ஏற்பாடு செய்தார். 06/02/1989  அன்று வெள்ளை நிற மாருதி வான் ஒன்று எனது வீட்டில் வந்து நின்றது. ரகு, பாலப்பா, தாஸ் மூவரும் வந்து என்னை ஏற்றிக் கொண்டு சென்றார்களெனத் தனது அனுபவத்தை திரு.வை.கோ குறிப்பிடுகையில்….!அவ்வாகனத்தை போராளி நியூட்டன் ஓட்டிச்சென்றார். இடைவெளியில் மற்ற ஒரு வாகனத்தில் அருணா இணைந்து கொண்டார், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டைத் தாலுகாவில் அமைந்துள்ள கடற்க்கரைக் கிராமம் மல்லிப் பட்டினம். அந்த அழகிய மீன்பிடிக் கிராமத்தில் இருந்துதான் எனது பயணம் ஆரம்பமானது, 

பகல் வேளையில் சென்றால் அவர்கள் அடையாளம் காணக்கூடும் என்பதால் இரவு எட்டுமணிக்கு எங்களின் பயணம் ஆரம்பம் ஆனது;படகு ஓட்டியான மரி,துரை என நாலு பேர் இருந்தார்கள். இவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள். பின் ஆழ்கடலில் நின்று இரவானதும் ஈழம் வெளிக்கிட்டோம். வேகமாகச் சென்று வெற்றிலைக்கேணி தாளையடி என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கிருந்து மீன் பிடிபடகு ஒன்றில்  நாயாற்று சிறு கடலிற்குச் சென்றோம். முகாமமைத்து இருந்த இந்திய இராணுவத்திற்கு தெரியாமலே எங்களின் பயணம் இருந்தது. அங்கே நாங்கள் சென்றதும் எங்களின் வருகையைப் பார்த்துக் கொண்டு தளபதி சொர்ணம்

அவர்களின் அணி தாயாராக நின்றது. படகில் இருந்தவாறே சொர்ணம் ஓடி வந்து கை கொடுத்து என்னை இறக்கினார். சொர்ணம் அணியில் போராளி தூயாமணி உட்பட 25 போராளிகள் வந்திருந்தார்கள்.  அதிலிருந்து வை.கோ. அவர்களை நான்கு போராளிகள் ஸ்ரச்சர் போன்றவொன்றில் தூக்கிக்கொண்டு நடக்க பின்னாலும் முன்னாலும் போராளிகள் பாதுகாப்பு வழங்கிக்கொண்டு சென்றார்கள்.புனித பூமியை அண்மித்தவுடன் தன்னை இறக்கி விடுமாறும் தான் நடப்பதை வீடியோ எடுக்க வேண்டும்! என வை.கோ அடம் பிடித்தமையால் போராளிகள் இறக்கி விட பின் அவர் நடந்து சென்றார். அதன்பின் அங்கு இருக்கும் நடைமுறைகளை வை.கோ கேட்டு அறிந்தார்.

பின் உலக நாடுகள் பற்றி போராளிகளிற்குப் பாடங்கள் சொல்லிப் புரியவைத்ததோடு அவர்களின் மன உறுதியை இன்னும் ஊட்டினார். அங்கே இந்திய இராணுவத்தால் வீசப்பட்ட 300 கிலோக் கிறாம் குண்டுகளையும் அதன் கிடங்குகளையும் அவர் பார்வையிட்டார். இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதால் இலங்கை அரசே  வளர்ச்சி அடைந்ததாக சொல்லித் தலைவர் கவலைபட்டார். இந்திய இராணுவத்திற்கு எதிராக நாம் சண்டையிட விரும்பவில்லையெனவும்; அச்சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும்  தலைவர் தெளிவு படுத்தினார்.

அங்கே அவர் நிற்கும் போது சங்கர், கிட்டு ,யோகி, பால்ராஜ் என பல போராளிகளையும் அவர்பார்த்தார். சில குறிப்பிட்ட வாரங்கள்  அங்கே தங்கிய அவர் அவருக்கு எனத் தலைவரால் ஒரு பிரியாவிடையும் அவருக்கு வைக்கப்பட்டது. அடுத்து அவரை அனுப்புவதற்கான பொறுப்பு பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவரைப் பாதுகாப்பாக நாங்கள்கொண்டு சென்றபோது இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 13 போராளிகள் காயம் அடைந்தனர். இருந்தும் அவர்களின் முற்றுகையை முறியடித்து பாதுகாப்பாகக் கொண்டு சென்றோமெனப் பால்ராஜ் குறிப்பிட்டார். பின் யாழ்பாணம் சென்ற வை.கோ அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டுள்ளார். 03/03 /1989 அன்று வல்வெட்டித் துறையில் இருந்து தமிழகம் சென்றார். வை.கோ  அவர்கள் அங்கு சென்றதும் ரகு அவரை ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டில் விட்டுள்ளார். அங்கு சென்றதும் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கு அங்கிருந்த செல்வாக்கு மிக்க தலைவர்களோடு பேசிக் கொண்டேயிருந்தார் வை.கோ;

இக்கதையில் வருபவர்களான தளபதிகளான சங்கர்= சொர்ணம்= றோவட்= பால்ராஜ் மேற்குறிப்பிட்ட அனைவரும் தாய் மண்ணை மீட்டதற்காக தங்களை அற்பணித்து விட்டார்கள் இதில் தற்பொழுது இப் புத்தகம் எழுதும் காலத்தில் உயிரோடு இருந்தவர்கள் தூயாமணி மற்றும் தேவர் அண்ணா என்பதும் குறிப்பிடக்தக்கது,?

அடுத்து இரண்டாவது செக்மேற் நடவடிக்கை பற்றி பார்ப்போம்

தொடரும் அன்புடன் ஈழமதி

Share:

1 thought on “b 108 பாகம் 03 தமிழிழீழக்கதை.      (Tamil Eelam of. story)  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு”

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *