செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது.

செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள்

அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி | Chandrasekhar And His Group Were Chased Away
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *