அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நேற்று (25) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த விஜயத்தின் ஓரங்கமாக யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் தேங்காய் உடைத்து  வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். 

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் | Un Envoy S Emotional Act At Nallur Murugan Temple
யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் | Un Envoy S Emotional Act At Nallur Murugan Temple

 யாழ் விஜயத்தின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் சந்தித்த உயர்ஸ்த்தானிகர், சுமார் ஒருமணிநேரம் வரை அவர்களுடன் பரந்துபட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *