இந்தப் பூமியில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வும் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் (South Africa) பூமிக்கு அடியில் அமைதியாக ஒரு முக்கியமான மாற்றம் நடக்கிறதாம். 

இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போல இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அமைதியான மாற்றங்கள்

இந்த உலகில் அமைதியாக பல்வேறு மாற்றங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன. சிறு மாற்றங்கள் கூட பூமியின் செயல்பாட்டையே மாற்றுவதாகவே இருக்கிறது. 

பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு - இரண்டாக பிளக்கும் மிகப்பெரிய கண்டம் : உருவாக போகும் புதிய கடல் | Earth S Mysterious Heartbeat Tearing Africa Apart

இதனால் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதன் காரணமாகவே உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தெற்கு ஆப்பிரிக்காவில் பூமிக்குக் கீழே அசாதாரணமான நிகழ்வு நடந்து வருவதாக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

மூன்று டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் ஒரு வித அதிர்வுகள் ஏற்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கடல்

இது கிட்டதட்ட இதயத்தின் துடிப்பைப் போலவே ஏற்படுவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். உருகிய மாக்மா பூமியின் மேலோட்டை கீழே இருந்து தாக்குவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு - இரண்டாக பிளக்கும் மிகப்பெரிய கண்டம் : உருவாக போகும் புதிய கடல் | Earth S Mysterious Heartbeat Tearing Africa Apart

இது படிப்படியாகக் கண்டத்தைக் கிழித்து, ஒரு புதிய கடலை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அஃபார் பிராந்தியம் மற்றும் மெயின் எத்தியோப்பியன் ரிஃப்ட் முழுவதும் இருந்து 130க்கும் மேற்பட்ட எரிமலை பாறை மாதிரிகளைச் சேகரித்த ஆய்வாளர்கள், அதை மற்ற தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதில் தான் இப்படி ஆப்பிரிக்காவுக்குக் கீழ் மிகப் பெரிய மாற்றம் நடந்து வருவது தெரிய வந்துள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *