திருநங்கைகள் குறித்து பேசும்போது, பெரும்பாலும் அவர்கள் துன்பங்களையே நாம் நினைக்கிறோம்.புறக்கணிப்பு, அவமதிப்பு, கேலிகள்… இவைதான் முதலில் ஞாபகம் வரும்.
ஆனால் உண்மையில், அவற்றையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகள், சாதனைகள், பெருமைகள் நிறைந்திருக்கின்றன. சிலர் கல்வியில், சிலர் கலையில், சிலர் சமூக சேவையில் தங்களை நிரூபித்து இருக்கிறார்கள்.
இந்த சாதனைகள் பெரும்பாலும் பேசப்படுவதில்லை.
ஐபிசி தமிழின் “முப்பரிமாணம்” நிகழ்ச்சி, அந்த மறைக்கப்பட்ட வாழ்க்கைகளையும், அந்த சாதனைகளையும் அவர்கள் மூலமாகவே இங்கு வெளிக்கொணருகிறது….