வடக்கு காசாவின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, காசா நகரம் மற்றும் ஜபாலியா முழுவதும் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அல்-மவாசியின் கடலோரப் பகுதியை நோக்கி தெற்கே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்தம்
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக குறைந்தது 86 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்-மவாசியின் “பாதுகாப்பு மண்டலம்” என்று அழைக்கப்படும் இடத்தில் குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.