கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30, 2025) 6 கோடி ரூபா பெறுமதியான மின்னணு உபகரணங்கள், இலங்கை சுங்க சேவையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த உபகரணங்களை 22 வயது இளம் தொழிலதிபர் ஒருவர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக பொருட்களை கொண்டு வந்ததால் கைது
பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களில் கைபேசிகள், மடிக்கணனிகள் மற்றும் மேக்புக் கணினிகள் உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் துபாயிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
சட்டவிரோதமாக உபகரணங்களை கொண்டு வந்த பயணி அவிசாவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அரச சொத்தாக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.