முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் புதுக்குடியிருப்பு சுகாதாரப் பிரிவின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர்களால் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வர்த்தக நிலையங்களில் வண்டு மொய்த்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அத்துடன் டெங்கு தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டு வர்த்தகர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வர்த்தகர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை | Surprise Raids Mullaitivu Business Establishments
முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை | Surprise Raids Mullaitivu Business Establishments
முல்லைத்தீவு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை | Surprise Raids Mullaitivu Business Establishments
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *