கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்ற குடும்பஸ்தர் ஒருவர்  மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இதன் போது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

 மேலதிக விசாரணை

 குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில் உறவினர்களில் உதவியுடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments