பாகம் மூன்றில் பதிமூன்றாவதுதொடர்
முக்கிய நாளான நவம்பர் 27/11/1989 ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் நாளை தலைவர் புனித பூமியில் ஆரம்பித்து வைத்தார்.

மணலாற்றுக் காட்டில் வைத்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவு அடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை நினைவு கூறும் நாளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை தேசியத் தலைவர் மனதில் உதயம் ஆனது. கேணல் சங்கர் அவர்கள் தலைவருடன் வெளிநாட்டுச் செயல்பாடுகள் பற்றி தலைவர் அவர்களோடு உரையாடுவது வழமை.முதலாவது உலகப் போரின் போது போர்க்களத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட பொபிமலர் நினைவு நாள் பற்றி கேணல் சங்கர் அவர்கள் தலைவருக்குத் தெரிவித்துள்ளார்,அதைக் கேட்ட தலைவர் நாங்களும் எங்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளிற்கு என ஒரு நினைவு நாளை உருக்வாக்கிவிட வேண்டும் என தீர்மானித்தார்.
தொடர்ந்து அவர் சிந்தித்த போது எமது விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக வீரச்சாவு அடைந்த லெப்ரினன் சங்கர் சத்தியநாதன் இறந்த நாளான 27/11/1982 இந்த நாளையே தேசிய மாவீர் நாளாக நினைவு கூறுவது என தீர்மானித்தார். அன்றறிலிருந்து எமது மாவீரர் நாள் ஆரம்பமானது. சங்கர் பற்றிப்பார்போம், வடமராட்சி கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கர்,1978 பிற்பகுதியில் இயக்கத்தில் இணைந்துகொண்டார், அக்காலத்தில் சங்கர் அவர்கட்கு குறிபார்த்துச் சுடும்பயிற்ச்சி வழங்கப்ட்டது. அப்பயிற்சியின் போது குறிதவறாமல் அவ் இலக்கைச் சுட்டு அதில் பங்குபற்றிய போராளிகளை விட கூடுதலான மதிப்பெண்களை அவன் எடுத்தான்.
அதன் காரணமாகத் தலைவர் அவர்களால் 045 ரிவோல்வர் ஒன்றைத் அவனுக்குப் பரிசாக வழங்கினார். அதற்குப்பின் 81 ஆம் ஆண்டு நவீன ஆயுதங்கள் பெறும் பயிற்சியை சங்கர் பெற்றுக் கொண்டான். அடுத்துஅதே காலம் தலைரின் மெய்ப்பாதுகாவலாக இருவர் நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று சங்கர் இரண்டாவது ரகுவப்பா அன்றில் இருந்து ஜீ 3 ஆயுதம் சங்கருக்கு வழங்கப்பட்டது, 27/10/1982 அன்று சீலனின் தலைமையில் நடைபெற்ற பொலிஸ்ரேசன் தாக்குதலில் பொறுப்பாக சென்ற சீலன் அச்சண்டையில் சீலன், குண்டப்பா, புலேந்தி மூவரும் காயம் அடைந்தமையால் அவர்களைப் பாதுகாப்பான இடம்கொண்டு சென்றது வரை அங்கே எடுத்த ஆயுதங்களை மறைப்பான இடத்தில் வைத்தது வரை அனைத்து வேலைகளையும் சங்கரே செய்து முடித்தான்.,
அதனால் அனுடைய இறந்த நாளை தலைவர் தேர்ந்து எடுத்தார்.

27/11/1989 மாலை 12 மணிக்கு தேசிய மாவீரர் நாள் ஆரம்பித்து வைத்து தலைவர் உரையாற்றினார், எமது விடுதலைப் போராட்டத்தில் இன்று ஒரு முக்கிய நாளை பிரகடனம் செய்துள்ளேன். இதுவரை காலமும் எமது புனித இலட்சியத்திற்காக உயிர் தியாகம் செய்த 1307 போராளிகளையும் நினைவு கூறும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்டவர்களை நினைவு கூறுவது வழமையாகும். அதை நீங்களும் அறிந்து இருப்பீர்கள்” இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளியையும் தனிப்பட்ட ரீதியாக நினைவு நாட்களாகக் கொண்டாடுவது வழக்கமாவிருந்து வந்தது. ஆனால் இன்றிலிருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் வருடத்தில் இன்றைய நாளான நவம்பர் 27 நினைவு கூறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எமது விடுலைப் போராட்டத்தில் முதலாவது வீரச்சாவு அடைந்த லெப். சங்கர் அவர்களின் நினைவு நாளையே தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தியுள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களிற்கு ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவியில் உள்ள போராளிகள் வீரச்சாவு அடைந்தால் மட்டும்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம். அப்படிப் பார்ப்பது தவறு வீரச்சாவு அடைந்த அனைவரும் சமனாக மதிக்கப்பட வேண்டும். அதை ஒட்டிய நாம் இந்த மாவீரர் நாளைப் பிரகடனப் படுத்தியுள்ளோம். இன்றையிலிருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரண போராளி வரை அனைவரையும் சமனாகக் கருதுகின்றோம்.
இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தும் நிலையும் சில போராளிகளை அஞ்சலி செலுத்தப்படாமல் புறக்கணிக்கும் நிலையும் உருவாகும் என நினைக்கின்றேன். அனைவரையும் சமனாக ஒரேநாளில் அஞ்சலி செலுத்தி வணங்க வேண்டும் என்பதற்காகவே இந்நாள் உருவாக்கப்பட்டுள்ளது.ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும், அறிவாளிகளையும், பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாக மாறி அது அழிந்து விடும், எங்களின் இனத்தில் பல அறிவாளிகள் இருக்கின்றார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது! எங்கள் இனத்தின் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகின்றார்கள்.அத்தோடு மற்றய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமக்கு வீரர்களிற்குத்தான் பஞ்சமாகயிருந்தது, ஆனால் இன்று நாம் எமது வீரர்களைக் கெளரவிக்கும் நிலைக்கு வந்துள்ளோம்.
அதற்குக் காரணம் இந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் உயிர் அர்ப்பணிப்பால்தான் இந்த உயரிய நிலை உருவாகியது. இதுவரை காலமும் எங்களுடைய இன விடுதலைக்காக போராடியவர் யார்? என்ற நிலையிலிருந்து இன்றிலிருந்து இனத்தின் வீரர்கள் யார் என்பதை எமது மக்களிற்கு அடையாளப் படுத்தியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த் தியாகம்தான். அவர்களுடைய வீரமான உணர்வானது தங்களின் உயிரையே மதியாது போராடித் தங்களின் உடல் சிதைவடைந்த நிலையிலும் நிதானமாக எதிரியை வீழ்த்தியதோடு மட்டுமன்றி உயிரோடு பிடிபட்டால் சக நண்பர்களிற்கும் உடமைகளிற்கும் ஆபத்து வரும் என்பதற்காக சைனைட்கொண்டு தங்களின் உயிரை அர்ப்பணித்த மிகப்பெரிய வரலாறு எமது வீரர்களிற்கு உள்ளது.
உலகநாடுகளை ஒப்பிடும்போது எமது வீரர்களிற்கு ஒரு தனிப் பெரும் மரியாதையை இருக்கின்றது .எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான தினமாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும். எனத் தேசியத் தலைவர் அம்மாவீரர் நாளில் குறிப்பிட்டிருந்தார்.
தேசியத் தலைவர் அவர்களது வேண்டுகோளுக்கு அமைவாகத் தமிழீழ மண்ணில் மாத்திரம் இன்றி எட்டுக் கோடித் தமிழர்கள் எங்கெல்லாம் பரவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் மாவீரர் நாள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து முதல் இரவு தீபம் ஏற்றும் நேரம் இரவு 12 மணியாகயிருந்து 1992 ஆண்டுஅவ் நேரம். 6, 00 மணி_ 05 ஐந்து நிமிடமாக மாற்றப்பட்டது ,முதல் அவர் காயம் அடைந்த நேரம் பதிவாக இருந்தது ,பின் அவர் சாவடைந்த நேரம் தேர்வு செய்யப்பட்டது அன்றில் இருந்து இதே நேரம் நடைமுறையில் உள்ளது,
இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் என்ன நடந்தது என்பது பற்றி போராளி பாலாமற்றும் தேவராஜ் இருவரும் குறிப்பிடுகையில்
இந்திய? இரணுவத்தின் அடக்குமுறையில் தமிழீழம் இருந்த காலம் அது

எமது கிராமத்தைச் சுற்றி வளைத்து அனைத்து மக்களையும் பாடசாலைக்கு வருமாறு கூட்டிக் கொண்டு சென்றது இந்திய இராணுவம். அது எமது கிராமத்தில் உள்ள கிண்ணையடி பாடசாலை. அங்கே சென்றதும் ஆண்கள் பெண்கள் வேறு வேறாகப் பிரிக்கப்பட்டார்கள். அதையடுத்து 15 தொடக்கம் 30 வரையான ஆண்களை பிடித்துத் தலையை கம்பி வேலிக்குள் புகுத்தியவாறு படுக்கையில் வைத்து பெரியதடியால் துடையில் அடித்தது இந்திய இராணுவம்.எனக்கும் கடுமையான அடி விழுந்தது அடி மட்டும் இல்லாமல் சப்பாத்தால் இந்திய இராணுவம் உதைத்து எனது பல்லும் விழுந்தது. அன்றைய நாள் அந்தப் பாடசாலை கடுமையான சன நெரிசலாகயிருந்தது.
பெண்கள், குழந்தைகள் அனைவரும் இதைப்பார்த்து அழுத வண்ணம் இருந்தார்கள்.பாடசாலைக்கு அருகில் நடேசன் என்பவரின் கடையிருந்தது. அங்கே இரு போராளிகள் இரவு பதுங்கியிருந்திருக்கின்றார்கள். அத்தகவலை மாற்றுக் குழுக்களைச் சேர்ந்த யாரோ இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்தி விட்டார்கள். அதனால் அதிகாலை 3 மணிக்கு இராணுவம் அக்கிராமத்தைச் சுற்றி வளைத்து விட்டது . ஆனால் இராணுவத்திற்கு அவர்கள் இருக்கும் இடம் தெரியாது பாடசாலைக்கு அருகாமையில் இருந்த பயன்படுத்தப் படாத கடைக்குள்தான் அவர்கள் இருவரும் இருந்தார்கள். கடை பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அதற்குப் பக்கத்தில்தான் கிண்ணையடிப் பாடசாலையிருந்தது.
அதுக்குள்ளே சச்சி / மற்றும் அங்கிள் இரு போராளிகளும் இருக்கின்றார்கள். அதில் அங்கிள் யாழ்மாவட்டத்தைச் சேர்ந்தவர். சச்சி கிரானைச் சேர்ந்தவர்,
அந்த ஊர் மக்களிற்கு இருவரும் பழக்கமானவர்கள் . இருவரில் ஒருவர் திடீரென இருமி விட்டார். உடனே இந்திய இராணுவம் கடையை உடைத்து இருவரையும் வெளியே எடுத்தது. ஆனால் அவர்கள் இருவரும் அரை உயிரில் இருந்தார்கள். ஏன்னென்றால் அவர்கள் இருவரும் முதலிலே குப்பி கடித்து விட்டார்கள். இருவரும் தங்களின் உயிரைப் போக்குவதற்காக தலையை நிலத்தில் புகுத்திய வண்ணம் உயிரை விடுவதற்காகப் போராடிக் கொண்டேயிருந்தார்கள்.
அங்கே நின்ற எல்லோரிடமும் இந்திய இராணுவம் தேங்காய்பால் மற்றும் பழப்புளி எல்லோரிடமும் கேட்டார்கள். ஆனால் எவரும் கொடுக்க முன்வரவில்லை.சிறிது நேரத்தில் அவர்கள் இருவரின் உயிர் பிரிந்தது . இரவு ஐந்து மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தது இந்திய இராணுவம். அக்கிராமத்தில் ஒரு சிறிய பலசரக்குக் கடை ஒன்று நான் போட்டிருந்தேன். இந்திய இரணுவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான் இந்திய இராணுவத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன வைராக்கியம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு அமைவாக 1988 கடைசிப் பகுதியில் சுந்தரம் என்பவரின் உதவியோடு விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்தேன்.
எக்காரணம் கொண்டும் நீங்கள் விலக முடியாது என அவரால் பல தடவை சொல்லப்பட்டு விருப்பம் இல்லாவிடில் நீர் இப்பொழுதே போய் விடலாம் என அவர் பல தடவை புத்தி எனக்கு சொன்னார். நான் கண்டிப்பாகச் சேரத்தான் போறேன் என பிடிவாதமாக நின்றேன். அடுத்த நாள் ஜெனாத்தா மற்றும் கடவுள் இருவரும் என்னைக் கூட்டிக் கொண்டு போக வந்தார்கள். அவர்களோடு “மலை வேஸ் “என்ற இடத்திற்கு நான் போனேன். அங்கே ஒரு பத்துப் பேர்தான் நின்றார்கள். கப்டன் தினேஸ் பொறுப்பாகயிருந்தார். இவர் 1991 ஆனையிறவுச் சண்டையில் வீரச்சாவு அடந்தவர்.
எங்களின் கடமை பொருட்களை வேண்டுவது, அல்லது கடத்துவது அப்பொருட்களை பயிற்சி முகாம்களிற்கு அனுப்புவதே கடமையாகயிருந்தது.
உடனே உங்களைப் பயிற்சிக்கு அனுப்ப முடியாது எனவும் சில குறிப்பிட்ட மாதம் கழிய அனுப்பலாம் என்று என்னிடம் சொன்னார் கப்டன் தினேஸ். நான் அதைக்கேட்டு சரி என்றேன். அப்பிரதேசம் கடுமையான வெயிலாகயிருந்தது . சோலைக்காடு இடைக்கிட சிறு வெளிகள் நிறைய மலைகள் என காணப்பட்டது. இரவுகளில் கடுமையான குளிர் கிராமங்களில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் துரத்தில் இவ்விடம் இருந்தது.

ஜெனாத்தாவின் தலைமையில் நான், கடவுள் மூவரும்மாக வாகநேரிக்கு மேற்க உள்ள கொழும்பு ரோட்டிற்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபடுவோம். அதில் வரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான உணவுப் பொருட்கள் நிறைந்த லொறிகளை கடத்திக் கொண்டு பாதுகாப்பான காடுகளிற்குக் கொண்டு சென்று விடுவோம். இதுவே எங்களின் வேலையாகயிருந்தது.சில கடத்தல்கள் வெற்றியடையும் சில தோல்வி அடையும் அப்படியே எங்களின் காலம் சென்றது. அக்காலப் பகுதியில் கணிசமான தமிழ் இளைஞர்கள் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனமான தாக்குதல்கள் மற்றும் இயக்கம் என சந்தேகப்படுபவர்களை அடித்துக் கொலை செய்வது 75 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மீதான பாலியல் அதன் பின் கொலைகள் எனப் பல மிருகத்தனமான தாக்குதல்களால் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைய வந்துகொண்டேயிருந்தார்கள்.
6ம் மாதம் 1989 ஜெனாத்தா மற்றும் தினேஸ் எங்களைக் கூட்டிக்கொண்டு அநுராதாபுரம் சிங்களவோடர் விசர் கெங்கை பயிற்சி முகாமை நோக்கி நடக்கத்தொடங்கினோம். 15 இளைஞர்களில் நானும் ஒருத்தனாக நடக்கத் தொடங்கினோம். வானுயர்ந்த குனுகுறுளை மரம் என அங்கே கதைப்பார்கள். அந்த மரம் அப் பெரும்காட்டில் கூடுதலாகக் காணப்பட்டது.இரவுபகலாக நடந்துகொண்டேயிருந்தோம். அருவிகளைக் கண்டால் அவ் இடங்களில் இருந்து தண்ணீர் குடித்து விட்டுப் பின் நடக்கத் தொடங்குவோம். இரவு பகலாக நடந்து 3 நாட்களில் அப்பயிற்சி முகாமை சென்றடைத்தோம்.
மனோ மாஸ்ட்டர் உங்களோடு நாளை கதைப்பார் என அங்குள்ள கஸ்ரோ எங்களிடம் சொன்னார்.

அடுத்த நாள் எங்கள் 15 பேரையும் கஸ்ரோ அலுவலகம் வரச்சொல்லியிருந்தார். நாங்கள் எல்லோரும் போனோம் – அனைவருக்கும் கஸ்ரோ இயக்கப் பெயர் வைத்தார். எனக்கு பாலா என பெயர் வைத்தார். பின் முகாம் கட்டமைப்புத் தொடர்வாக கஸ்ரோ எங்களிற்குத் தெரியப்படுத்தினார். முகாம் பொறுப்பாளர் மனோ மாஸ்ட்டர் தலைமை ஆசிரியர் மேஜர் குலதீபன் அவருக்கு கீழுள்ள ஆசிரியர்களான . 1 பிரவா 2 தினேஸ் 3 வினோத் அடுத்து.நோயல் முகாம் பொறுப்பாளராக சசி தொலைத்தொடர்பாளர் மற்றும் அறிக்கை கஸ்ரோ நான் என எங்களிற்குத் தெளிவு படுத்தினார்.
இதில் மேற்படி கஸ்ரோ என்பவர் கருணாவோடு பிரிந்து கொழும்பில் தங்கியிருந்த வேளை கீர்த்தியின் தலைமையில் சென்று எமது போராளிகள் கொழும்பில் வைத்து எட்டுப் பேரைச் சுட்டுக் கொன்றனர். அதில் கொல்லப்பட்டவர்களில் கஸ்ரோவும் ஒருவர்.
மற்றும் 17/05 /2009 முள்ளிவாக்காலில் சரண்டர் அடைந்து பிரபா காணமல் போய் விட்டார். மற்றும் சசி இயக்கத்தில் இருந்து விலகி யாழில் ஒருபொதுப் பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கின்றார்.அடுத்த நாள் காலையில் மனோ மாஸ்ட்டர் அங்கே கூடியிருந்த 150 போராளிகளோடும் கதைக்கத் தொடங்கினார். சுட்டாறிய நீர் குடிக்க வேண்டும். சுடு நீரில் டெட்ரோல் கலந்து குளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பயிற்சி முகாமில் இருந்து ஒடினால் கடுமையான தண்டனை அல்லது மரன தண்டனை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் தோளில் கொழுவக்கூடிவாறு 5k.lo ஒரு சாக்கால் தைக்கப்பட்ட அவல் முதுகில் கொழுவக்கூடிய பை ஒன்று தரப்பட்டது ஆயுதத்திற்குப் பதிலாக ஒரு பெரிய தடியும் தரப்பட்டது. ஆரம்பப் பயிற்சிக்கான அனைத்து வேலைகளும் தயாரானது! அடுத்த நாள் காலை 9 பிற்பகல் அப்போதைய மாவட்டத் தளபதியாகயிருந்த கருணா என்பவர் 40 பேர் கொண்ட மேற் பாதுகாப்பு அணியோடு அங்கே வந்திருந்தார். ஆரம்பப் பயிற்சியை ஆரம்பித்து கருணா அவர்கள் பேராளிகளோடு பேசுவதற்கு ஆரம்பித்தார் . 15/07/1989 காலை 9 மணி கருணா மேற்படி பேசும் போது விடுதலை புலிகளின் தலைவர் மிகவும் நல்லவர் எனவும் ஏனெனில் இந்திய அரசாங்கம் நீங்கள் வடமாகாணத்திற்கு முதலமைச்சராகயிருங்கோ ஆனால் கிழக்கு மாகாணம் முவ்வின மக்கள் வாழ்க்கூடிய ஒரு பிரதேசமாகயிருக்கும் என இந்திய அரசால்சொல்லப்பட்டது.
ஆனால் அதைத் தலைவர் ஏற்கவில்லை. அவர் சொன்ன பதில் வடக்கிற்கு இப்பொழுதும் நான் தலைவராகத்தான் இருக்கின்றேன். ஆனால் கிழக்கிற்காகத்தான் போராடுவதாக அவர் சொல்லி அதிலிருந்து அவர் வெளியேறி விட்டார். எனவே இது இப்பொழுது கிழக்கிற்கான ஒரு போராகவே இருக்கின்றது. அதனால் கிழக்கு மாகாண இளைஞர்களாகிய நீங்கள் தான் தலைவருக்கு பலம் சேர்க்க வேண்டும், பயிற்சி நிறைவு செய்ததும் வடகிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சென்று சண்டையிடக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். என பேசித் தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து மனோ மாஸ்ற்றர் பயிற்சி தொடர்பாகப் பேசினார். தொடர்ந்து மனோ மாஸ்ற்றர் முன்னால் ஓட அனைத்துப் போராளிகளும் அவரைப்பின் தொடர்ந்து ஒடத் தொடங்கினார்கள். தொடர்ந்து அன்றைய நாள் 15 பேருக்கு ஒரு ஆசிரியர் விகிதம் பத்து ரீம் பிரிக்கப்பட்டது. பின்னர் கடுமையான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு எடுக்க மறுத்த சில போராளிகளிற்கு கடுமையான அடியும் விழுந்தது. இரண்டு மாதமாக அப்பயிற்சியை எடுத்தோம். ஒரு கிழமைக்கு ஒருக்கா விசர் கங்கையில் போய் குளிப்போம். ஏனைய நேரங்களில் மேல் கால்களைக் கழுவுவோம். அப்படியே எங்களின் காலம் கழிந்தது.
பயிற்சி நடந்து கொண்டுடிருக்கும் வேளையில் மீளவும் புதியவர்களை இணைப்பதற்காக மேஜர் நோயல் அவர்கள் தேவராஜ் உட்பட சில குறிப்பிட்ட போராளிகளைக் கூட்டிக்கொண்டு எங்களின் பயிற்சி முகாமை நோக்கி வந்து கொண்டு இருந்தார். எங்களின் முகாம் பாதுகாவலரான சத்தியேஸ்வரன்,/ சத்தி இவர் ஆமி என நினைத்து 30 கலிபறால் வானத்தை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார். அதைத் தொடர்ந்து வந்தவர்களும் ஓடி விட்டார்கள். நாங்களும் ஓடுவதற்கு தயராகியிருந்தோம். பின்னர் தொடர்பு கொண்டு கதைத்து அவர்களை உள்ளே எடுத்தோம். தொடர்ந்து நிலமை வழமைக்கு திரும்பியது.

அக்காலப் பகுதியில் இலங்கை அதிபர் பிரேமதாசாவிற்கும் எமது தலைவர் வே. பிரபாகரனிற்கும் இரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக மாறியதோடு பெரும் தொகையான ஆயுதங்களையும் திரு. பிரேமதாசா எமக்கு வழங்கினார். இக்கதையை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.இப்பயிற்ச்சி முகாமிற்கான மரக்கறி சில உணவுப் பொருட்களை சிங்களப்பகுதிக்குப் போய்வாங்கி வரும் வேளையில் சிங்கள மக்கள் அதிசயமாக எங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
ஆனால் வட கிழக்கில் இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ” த்றீஸ்ட்டர்” எனப்படும் வதராஜப்பெருமாளின் தமிழ் துணைப்படைகளே வட கிழக்கில் இருந்தது.
சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மட்டு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை கல்லாறு என பல இடங்களில் முகாம் அமைத்திருந்தார்கள். அது அப்படியிருக்க 05//10/1989 எங்களுடைய ஆரம்பப் பயிற்சி நிறைவு செய்யப்பட்டது. சண்டைக்கு உரியவாறு 15 பேர் கொண்டே அணியாகப் பிரிக்கப்பட்டு மூத்த போராளிகள் ஆசிரியர்கள் அனைவரும் அணித்தலைவர்களாக அணிகளிற்கு விடப்பட்டர்கள். பின்னர் சுமார்150 போராளிகள் அங்கிருந்து கால்நடைகளாக புல்லுமலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். மூன்று நாட்கள் கடுமையாக நடந்து புல்லுமலையூடாக செங்கலடியை சென்றடைந்தோம்.

அங்கிருந்து அனைத்து இடங்களிற்கும் எங்களுடைய அணி சென்றது. நான்15 பேர் கொண்ட ரூபன் அவர்களின் அணியில் விடப்பட்டேன். அவரோடு உன்னிச்சை சண்டைக்காகப் போனேன் அங்கே எங்களிற்கும் தமிழ் இந்திய இராணுவத்தின் துனைக் குழுவிற்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.
கனிசமான துணைப்படையனரும் ஒரு சில பெண்களும் அங்கே காணப்பட்டார்கள். அதில் பலர் எங்களோடு சண்டையிட்டு சாவடைந்தார்கள். ஒரு சிலர் மட்டும் சரண்டர் அடைந்தார்கள். அதே நேரம் கல்லாற்றில் மூன்று நாட்கள் எங்களுடைய போராளிகள் அவர்களை முற்றுகையிட்டு இருந்ததால் கணிசமானவர்கள் அங்கேயும் சரண்டர் அடைந்தார்கள். தொடர்ச்சியாக நடைபெற்ற சண்டையால் மட்டு மாவட்டம் எங்களின் பூரணகட்டுப் பாட்டில் வந்தது.
அடுத்து ரூபன் அவர்கள் எங்களையும் ஏற்றிக் கொண்டு கருணா அவர்களைச் சந்திக்க கிரானிற்குச் சென்றார். எங்களோடு இருந்த போராளிஅங்கே நடந்த சண்டையில் வீரச்சாவு அடைந்தமையால் அவர்களின் வித்துடல் அங்கே இருந்தது. அவர் எப்படி வீரச்சாவு அடைந்தார். என்றால் தன்னமுனைக்கும் மயிலம்பாவெளிக்கும் இடையில் துணைப்படையின் தாக்குதலில் தலையில் காயப்பட்டு அவ்விடத்திலே தோத்திரன் வீரச்சாவு அடைந்தார் . அவரின் வித்துடல் கிரானில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.அதைக் கருணா பார்த்துக் கொண்டிருக்கின்றார். நானும் போய்ப் பார்த்தேன். அடுத்து கருணாவோடு சிறிது நேரம் கதைத்த ரூபன் அவர்கள் எங்களை ஏற்றிக்கொண்டு புலிபாய்ந்த கல்லிற்குச் சென்றார். அங்கே என்னையும் பட்டாவியையும் அந்த முகாமில் நிற்குமாறு சொல்லி விட்டு ரூபன் அவர்கள் சென்று விட்டார்.
புலி பாய்ந்தகல் பாடசாலையில் அவ்முகாம்அமைந்திருந்தது . அங்கே சந்தர் பொறுப்பாகயிருந்தார். ஆயுதக் களஞ்சியமும் அங்கே தான் இருந்தது. பகல் வேளைகளில் ஆயுதங்களைக் கிளின் பண்ணுவோம். அங்கே15 போராளிகளாய் இருந்தோம். அக்காலப் பகுதியில் சரண்டர் அடைந்த தமிழ் துணைக் குழுக்களில் விசாரனை முடிந்தவர்களை ஒவ்வொரு இரவும் சிலபேரை உளவு இயந்திரத்தில் ஏற்றி எங்களிடம் அனுப்புவார்கள். அவர்களிற்கு பனிஸ் மற்றும் பால் ரீ என்பன நான் கொடுப்பேன் . பின்னர் அவர்களை பட்டாவியிடம் கொடுத்து விடுவேன் .அவர்கள் இந்திய இராணுவத்திற்கு பல போராளிகளையும் எமக்கு ஆதரவான மக்களையும் காட்டிக்கொடுத்தமையால் இந்திய இராணுவம் அடித்தே அவர்களை கொலை செய்தது. சிலரை வைக்கோலின் உள்ளே போட்டு உயிரோடு எரித்தது. அத்தவறுகளை தாங்கள் விட்டதை விசாரனை மூலம் அவர்கள் ஒத்துக் கொண்டார்களென நான் அறிந்தேன்
.அப்படியான ஒரு சிலருக்கு அங்கே வைத்து பட்டாவி என்பவரே அவர்களுக்கு சாவொறுப்பு வழங்கினார். இவர்.1991 ஆனையிறவுச் சண்டையில் லெப்டினன்ட் நிலையில் அவர் வீரச்சாவு அடைந்தார். காலை எட்டு மணி திடிரென கருணா அவர்கள் சில குறிப்பிட்ட போராளிகளைக் கிரானுக்கு வருமாறு சொல்லி இருந்தார். அங்கே இருந்த புவி ,நிர்மலன் , பாவரசன் நான் நான்கு பேரும் கிரானுக்கு வந்தோம் . கடவுள் இவர்கள் எல்லோரும் இருந்தார்கள், பாவரசன் மட்டும் கடுமையான மகிழ்ச்சியில் காணப்பட்டார். ஏனெனில் அவர் தனது பிறந்த மண்ணைப் பார்க்கப் போகின்றார் . அதனால்தான் .. உடனே நாங்கள் வாகனத்தில் வந்து சேர்ந்தோம். அந்த ஆறுகளையும் வயல்வெளிகளையும், பார்த்து வந்தோம்.
ஆனால் அது கடசிப் பார்வை என்பது எங்களிற்கு தெரியவில்லை. அங்கே நாங்கள் வந்து இறங்கியதும் முதலில் வந்தே 45 போராளிகள் அங்கே இருந்தார்கள். அதில் எங்களோடு பயிற்சி எடுத்த கதிரவனும் நின்றார். 50 பேர் ஆகக் கூடியது. எங்களோடு பயிற்சி எடுத்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பாவரசனும் இருந்தார். அவரைப் பார்த்ததும் வட பகுதி போகப் போகின்றோம் என்பதை உணரக்கூடியவாறு இருந்தது. அப்பொழுது கருணா பேசத் தொடங்கினார். இங்கே ஐம்பது பேர் கூடியிருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் லோரஞ் அவர்கள் பொறுப்பாகயிருப்பார். அவரின் தலைமையில் நீங்கள் ஐம்பது பேரும் யாழ்ப்பாணம் போகப் போகின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஆயுதங்களோடு தலைவரின் பாதுகாப்பிற்காக அங்கே போகின்றீர்கள். முதலாவது எமது மாவட்டத்தில் இருந்து ஆயுதங்களோடு போகும் அணி நீங்களாகத்தான் இருக்கும். அத்தப் பெருமை உங்களைத்தான் சாரும் என கூறி முடித்தார்.
அங்கே இருந்தவர்கள் யாரும் வேறு இடம் செல்வதை விரும்பவில்லை, அவர்களின் கண் கலங்கியதை நான் நேரடியாகப் பார்த்தேன். அதில் இருந்த போராளி ஒருவன் திடீரென என்னை விடுமுறையிலும் அனுப்பவில்லை நான் எப்பவும் அம்மாவைப் பார்க்கமுடியாது என ஒப்பாரி வைத்தபடி தனது துப்பாக்கியால் தனதுகாலைச் சுட்டு அவன் கீழே விழுந்தான். அவனைத் தூக்கிக் கொண்டு சென்று முதலுதவி செய்த பின் மருத்துவ மனைக்கு அனுப்பினார்கள். நிலமை பதட்டமாகவும், பயமாகவும் இருந்தது.
லோறஞ் கதைக்கத் தொடங்கினார். இது புது விடயம் அல்ல வழமையாக நடப்பது தான் அங்கே இருப்பவர்கள் இங்கே வருவார்கள், இங்கே இருப்பவர்கள் அங்கே போவார்கள் இது ஒரு வழமையான நடைமுறை . அங்கே இருப்பவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்கள் தான் அனைவரும் எங்களுடைய மக்கள் தான். அமைதியாகயிருக்குமாறு அவர் குறிப்பிட்டார்.
3 விறன்LMG 3 கால் காஸ்ரோ மிகுதி M 70 துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. முன்னர் ஈரோஸ் அமைப்பிடம் இருந்து எடுக்கப்பட்ட T 81 துப்பாக்கிகளை மீளப்பெற்றனர். தரம் குறைந்த இந்தியாவின் ஆயுதங்களே எமக்கு வழங்கப்பட்டது. ஆரம்பகாலப் போராளிகளான சைமன் பரமதேவா பற்றியும் அவர்களின் திறமை பற்றியும் மூத்த போராளிகளால் எமக்கு சொல்லப்பட்டது.அவர்களும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் வீரச்சாவு அடைந்தது வடகுதியில்தான். ஒரு போர்வீரன் எங்கையும் வீரச்சாவு அடையலாம் அதைக் கதைப்பதும் அதற்கு பயப்பிடுவதும் ஒரு கோழையென அவர் தெளிவு படுத்தினார்.
அக்காலப் பகுதியில் எங்களால் பிடிக்கப்பட்ட துணைப் படைகளில் ஒருவரான ராஜா அவர்கள் சாவகச்சேரியை சேர்ந்தவர் என்பதால் அவரைக் கவனமாகக் கொண்டு அங்கே ஒப்படைக்குமாறு என்னிடம் தந்தார்கள். நான் அவரின் கைகளிற்கு விலங்கிட்டு அவரின் இடுப்பில் கயிறு போட்டுக் கட்டியிருந்தேன். இதைப்பார்த்த ௹பன் அவரின் கட்டை அவிழ்க்குமாறும் இரவு நேரம் மற்றும் காடுகளுக்கால் போகும் வேளையில் மட்டும் கட்டுமாறும் அவர் என்னிடம் குறிப்பிட்டார். நான் அதை ஏற்றேன். அதனையடுத்து ஐம்பது பேரையும் ஒரு பஸ்சில் ஏற்றிக் கொண்டு வெருகல் அத்தோரத்தில் விட்டார்கள். அதிலிருந்து நாங்கள் யாழை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

அடுத்து இவர்கள் அங்கே சென்றதும் யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என விரிவாகப்பார்ப்போம்
தொடரும் அன்புடன் ஈழமதி
thaarani