யாழில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைவரும் மற்றும் காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு
இதன்படி, எதிர்வரும் 20/07/2025 அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர் காணி உரிமை, கடற்றொழில் உரிமை மற்றும் உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.