உலகளவில் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கைப் பாடகி சினேகா சரிகமபவிலிருந்து வெளியேறி இன்று தனது நாட்டை வந்தடைந்துள்ளார்.

தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 தற்போது ஆரம்பமாகி பிரம்மாண்டமாக இடம்பெற்று வருகின்றது.

இதில் இலங்கை – மலையகத்தைச் சேர்ந்த சினேகா கலந்துகொண்டு சிறப்பான பாடல்களைப் பாடி பாராட்டைப் பெற்று வந்தார்.

சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர் சினேஹா வெளியேறியதற்கு உண்மை காரணம் | Real Reason Why Srilankan Contestant Sarikamapa

இந்த நிலையில் சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் மலையகத்தைச் சேர்ந்த சினேகா உடுத்தும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.

ஆடை மீதான பலரது விமர்சனங்கள் தன்னை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியதால் சரிகமப நிகழ்விலிருந்து வெளியேறிய பாடகி சினேகா இன்று தனது தாயகமான இலங்கையை வந்தடைந்தார்.

தாய்நாட்டை வந்தடைந்த சினேகாவை அவரது குடும்பமும் உறவினர்களும் ஆதரவாளர்களும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதன்பின்னர் இசைநிகழ்ச்சி பற்றியும் அவர் வெளியேறியது பற்றியும் அவரைக் கேட்டபோது, எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன்.

அதனால் சரிகமபவில் என்னால் பாடலை பாடமுடியவில்லை. சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர்.

இருப்பினும் என்னால் பாடல் சுற்றில் சிறந்த முறையில் பாடமுடியவில்லை. இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சினேகாவை இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அழைத்துச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் யாமினி தெரிவிக்கையில், மலையக மக்களின் கனவுகளை சுமந்து தான் சினேகா சரிகமபவிற்கு சென்றார்.

எனினும் அவளுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவள் தன்னால் பாட முடியாது எனத் தெரிவித்து நாட்டை வந்தடைந்தார். மிகவும் கவலையாக இருப்பினும் அவள் சிறியவள்.

இந்த வயதில் இவ்வாறான மன அழுத்தங்கள் அவளைப் பாதிக்கும். ஆகையால் கனவுகளைப் பாதியில் நிறுத்தி தாயகம் திரும்பியுள்ளார் எனத் தெரிவித்தார்.

சரிகமப இசை நிகழ்ச்சியிலிருந்து சினேகா வெளியேறியது தொடர்பில் ஊடகங்கள் அவரிடம் மேற்கொண்ட நேர்காணல் காணொளியில் அவர் மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தையும் கவலையையும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments