தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தையின் சித்திரவதையைத் தாங்க முடியாமல் காட்டிற்கு ஓடிய 14 வயது பள்ளி மாணவியைக் கண்டுபிடித்ததாக ஹதரலியத்த காவல்துறை தெரிவித்துள்ளது.
14 மற்றும் 8 வயதுடைய இரண்டு மகள்கள், தங்கள் 36 வயது தந்தையுடன் வசித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தந்தையின் சித்திரவதை காரணமாக, மூத்த மகள் 16 ஆம் திகதி காலை தனது ஆடைகளை பாடசாலை பையில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தந்தை காவல்துறையில் அளித்த முறைப்பாடு
பள்ளிக்குச் சென்ற தனது மகள் மாலை வரை வீடு திரும்பவில்லை என்று தந்தை ஹதரலியத்த காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உடனடியாக சிறுமியை தேடிச் சென்ற காவல்துறை அதிகாரிகள்,நாள் முழுவதும் உணவு ஏதும் அருந்தாமல் காட்டிற்குள் மரத்தின் கீழ் தூங்கி கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாள்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.