சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்தததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கண்ணிவெடி அகழ்வு 

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

சம்பூர் கடற்கரை ஓரமாக மனித எச்சங்கள்.. திடீரென இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணி | Sampur Beach Mine Clearance Work

இந்நிலையிலேயே இன்றையதினம் (20) குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்ளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்gட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments