மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துடன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி தீர்த்தகரை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவரும் பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே பண கொடுக்கல் வாங்களையிட்டு சம்பவதினத்தன்று இரவு பெண்ணின் வீட்டுக்கு சென்ற உறவினர் பணத்தை கேட்டு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண்ணின் உறவினரான ஆண் பெண்மீது வாளால் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் பெண்ணும் அவரது ஒரு வயது குழந்தையும் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

பணத்திற்காக உறவினர் செய்த கொடூர செயல், பச்சிளம் குழந்தை படுகாயம் ; தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் | One Year Old Hurt In Sword Attack In Tamil Area

பச்சிளம் குழந்தை படுகாயம் 

இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையையும் அவரது தாயாரையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை குறித்த பெண்மீதும் அவரது குழந்தை மீதும் தாக்குதலை நடாத்தியவர் காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *