தமிழராகயிருக்கலாம் என சந்தேகம்

(France) துப்பாக்கியால் சுடப்பட்டு புலம்பெயர்வோர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும் பிரான்சில் Dunkirk என்னுமிடத்தில் முகாமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அங்கு 20 வயதுடைய புலம்பெயர்வோர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஏழு குண்டுகள் 

அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அவரை நோக்கி சுமார் 20 குண்டுகள் சுடப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஏழு அவரது உடலில் பாய்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர் இளைஞர் | Migrants Shot In France

அவசர உதவிக்குழுவினர் அவரது உயிரைக் காக்க சிகிச்சையளித்தும், அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரை சுட்டது ஆட்கடத்தல்காரர்கள் என நம்பப்படும் நிலையில், குற்றவாளிகளைத் தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *