கண்டி (Kandy) யட்டிநுவர பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான சம்பிக்க நிலந்த குடும்பத்தாரின் மரணம்தான் தற்போது நாட்டில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி பேராதனை யஹலதென்ன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சம்பிக்க நிலந்த அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த நிலையில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களால் எழுதப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் விஜேசிங்க என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பிலும், சம்பவத்தின் விரிவான பிண்ணனி தொடர்பிலும் மற்றும் தொடரப்பட்டுள்ள விசாரணைகளின் அடுத்த கட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments