2025 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் தொடர்பில் பாபா வங்கா (Baba Vanga) வெளியிட்டுள்ள கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது.
இதில் அவர், “ஒன்றுபட்ட கை இரண்டாக உடைக்கப்படும், ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில் செல்லும்” என தெரிவித்துள்ளார்.
இது நேட்டோ நாடுகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அரசியல் பதட்டங்களின் அறிகுறியாக இருக்கும் என பலர் சந்தேகித்துள்ளனர்.
ட்ரம்ப்பின் நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) நடவடிக்கையால் நேட்டோ நாடுகளில் பிளவு ஏற்படும் சூழல் நிலவியது.

அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்திலும், மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பிளவைக் குறிக்கலாம் என நம்புகின்றனர்.
அத்தோடு, “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரே நேரத்தில் எழும் இரட்டை நெருப்பு ” என குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
இது காட்டுத்தீ அல்லது எரிமலை வெடிப்பை குறிப்பிட்டு இருக்கலாம் என கருதுகின்றனர் அத்தோடு, சிறுகோள் அல்லது விண்கல் பூமியை தாக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மற்றொரு கணிப்பில், மனிதகுலம் “பெற விரும்பாத” அறிவை நெருங்கும் என அவர் தெரிவித்துள்ளதுடன், “திறக்கப்படுவதை மூட முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, உயிரி தொழில்நுட்ப முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு அல்லது கருந்துளை குறித்த ஆய்வின் முன்னேற்றமாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.