கடந்த ஜூலை மாதம் முதல் சீனாவில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, அந்த நாட்டில் தற்போது சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுவான் அபராதம்
சீனாவின் பல மாகாணங்களில் நோயாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த வாரத்தில் மாத்திரம் 3,000 சிக்குன்குனியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளுக்கு அருகில் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 10,000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.