யாழ்ப்பாணத்திலிருந்து சுவிஸ்லாந்துக்குச் சென்ற 51 வயது குடும்பப் பெண் தனது மகளின் கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் சுவிஸ்லாந்தின் பேர்னில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மகள் பொலிசாரிடம் முறைப்பாடு
சில வருடங்களுக்கு முன் சுவிஸ்லாந்துக்கு திருமணம் முடித்துச் சென்ற மகள் தனது 2 வது மகப் பேற்றுக்காக தனது தாயாரை வரவழைத்துள்ளார்.
யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் முகாமைத்துவ அதிகாரியாகக் கடமையாற்றும் பெண்ணின் தாயார் , சுவிஸ்லாந்து சென்று மகளுடன் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் மகப்பேறு நடந்து ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் மருமகன் தனியறையில் தூங்கிக்கொண்டிருந்த மாமியாரை கட்டிப்பிடித்து அவரின் உள் ஆடைகளை கிழித்து பலாத்காரம செய்ய முயற்சி செய்துள்ளார் , மாமியாரிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தால் தாயார் அதிர்ச்சியடைத்த நிலையில் மகள் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மருமகனை கைது செய்யும் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடந்த சம்பவத்தால் , தாயும் மகளும் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.