மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையான 26 வயதுடையவரே உயிரிழந்தவராவார்.

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகம் ; கதறும் குடும்பம் | Young Family Man S Death In Tamil Area

 பின்னோக்கி சென்ற புகையிரதம் 

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதியே உயிரிழந்துள்ளார்.

வாகன சாரதியான இவர் களுவன்கேணி பிரதேசத்தில் இருந்து செங்கலடி நகரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றவேளை, புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்காக புகையிரத சாரதி புகையிரதத்தை பின்னோக்கிச் செலுத்தி ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளார். அப்போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments