இன்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் ரவிச்சந்திரன் ஜெனிபர் என்கின்ற மாணவியே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்தவராவார்.

புலமைபரிசில் பரீட்சையில் சாதனை படைத்த பார்வை இழந்த தமிழ் மாணவி | Blind Tamil Girl Shines In Scholarship Exam

சராசரி  வெட்டு புள்ளி

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்று வரும் இவர் 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதி அதிபர்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி மாணவர்களுக்கான வெட்டு புள்ளி 132 ஆக இருந்தபோதிலும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வெட்டு புள்ளி 80 ஆகும்.

குறித்த மாணவி 88 புள்ளைகளை பெற்று வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற நிலையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments