இத்தாலியில் இருந்து யாழ் வந்தவர் பற்றைக்குள் சடலமாக மீட்புயாழில் (Jaffna) நடை பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவரகையில், குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இத்தாலியிலிருந்து (Italy) யாழ்ப்பாணத்திற்கு வரகை தந்துள்ளார்.

உடற்பயிற்சி

சில தினங்களுக்கு முன்னர் நடை உடற்பயிற்சிக்கு சென்றவேளை அவர் சில விசமிகளால்மடக்கிப்பிடிப்பட்டு கழுத்து நசிக்கப்பட்டு கொலை செய்து காட்டுக்குள் போடப்பட்டுள்ளது, அத்தோடு அவரிடம் இருந்த விலைமதிப்பான போன் மற்றும் அவரின் கிறிடிக்காட் என்பன களவாடப்பட்டுள்ளது?

இத்தாலியில் இருந்து யாழ் வந்தவர் பற்றைக்குள் சடலமாக மீட்பு | Jaffna Resident Dies During Outdoor Exercise

இதையடுத்து, நேற்றையதினம் (05) கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள பற்றைக்குள் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரண விசாரணை 

இத்தாலியில் இருந்து யாழ் வந்தவர் பற்றைக்குள் சடலமாக மீட்பு | Jaffna Resident Dies During Outdoor Exercise

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments