மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று ச (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

 வைத்திய பரிசோதனை

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று (12) மாலை நேரத்தில் உறங்கியுள்ள நிலையில் அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் கணவர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ள நிலையில் வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments