பிரிட்டனில் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக ரசாயன முறை ஆண்மை நீக்கம் (Chemical Castration) மேற்கொள்ளும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை பிரிட்டன் நீதித்துறைச் செயலர் டேவிட் லேம்மி தெரிவித்துள்ளார்.

6,400 பாலியல் குற்றவாளிகள்

தென்மேற்கு பிரட்டனில் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த முறையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகவும், இதை அடுத்த கட்டமாக வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

6,400 பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்! பிரித்தானியாவின் கடும் முடிவு | Chemical Castration Against Women Abusers In Uk

இந்த முயற்சியின் கீழ், சுமார் 6,400 பாலியல் குற்றவாளிகள் மீது ரசாயன முறை ஆண்மை நீக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, பிரிட்டன் முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த நடவடிக்கை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் டேவிட் லேம்மி குறிப்பிட்டுள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments