பொதுவாகவே தற்காலத்தில் துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை , உடல் இயக்கம் அற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்ச்சியின்மை போன்ற பல காரணங்களால் பலரும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் இயற்கை தீர்வை தேடுபவரா நீங்க? அப்படியானால் நெல்லிக்காய் ஜூஸ் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.

தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! | Amazing Health Benefits Of Amla Juice

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் செரிந்து காணப்படுவதால், சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களிலும் நெல்லிக்காய் முக்கியத்துவம் பெறுகின்றது.

தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், உடலில் நிகழும் அற்புத மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்கலாம்.

தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! | Amazing Health Benefits Of Amla Juice

நெல்லிக்காய் ஜூஸ் ஆரோக்கிய நன்மைகள்

நெல்லிக்காயில் கால்சியம் சத்து அதிகயளில்  இருப்பதால், எலும்புகள் உறுதியாக்குவதிலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

அதுமட்டுமன்றி ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் ஜூஸ் சிறந்த மருந்தாக இருக்கும். நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.  

தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! | Amazing Health Benefits Of Amla Juice

எனவே தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், கூந்தல் மற்றும் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.

மேலும் நெல்லிக்காயில் நார்ச்சத்து செரிந்து காணப்படுவதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினம் ஒரு நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

நெல்லி ஜூஸில் நிறைந்து காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றத்தைப் பெறுவதை தாமதமாக்கி சருமத்தை இளமையாக பராமரிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! | Amazing Health Benefits Of Amla Juice

மேலும் எலும்புகளை வலுப்படுத்துகிறது வலுவான எலும்புகள் கால்சியத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதால்,நெல்லிக்காய்  ஜூஸ் பல பரிமாண ஆதரவை வழங்குகிறது. கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

இது கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. நெல்லிக்காய் கால்சியத்துடன்,  பாஸ்பரஸ் மற்றும் இரும்பை வழங்குகிறது, இது எலும்பு அடர்த்தியை பேணவும் உதவிபுரிகின்றது.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் மன தெளிவு மற்றும் உணர்ச்சி சமநிலையை ஆதரிக்க முடிவதுடன்  நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.

தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! | Amazing Health Benefits Of Amla Juice

ஆக்ஸிஜனேற்றிகள் மூளை செல்களில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மன அழுத்த ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதில் நெல்லிக்காய் சிறப்பாக செயல்படுகின்றது.

இது கார்டிசோல் அளவை சமநிலைப்படுத்தவும், மனநிலை மற்றும் கவனத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. மேலும் ஆரோக்கியமான தூக்கத்தை ஆதரிக்கிறது. மொத்தத்தில், இதய ஆரோக்கியம் முதல் மனநலம் வரையில் உடல், உள ரீதியாகவும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தினம் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் பெற முடியும்

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments