தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு மூதூர் – சேனையூர் வீரபத்திரன் கோயில் முன்றலில் நேற்று (21) மாலை இடம்பெற்றது.
நினைவஞ்சலி
நினைவேந்தல் நிகழ்வை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாகத் தீபம் திலீபனின் திருஉருவப்படத்துக்கு மலர்தூவி ஒரு நிமிட நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் பண்பரசன் கருத்து தெரிவித்தார்.