வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவை, தனி நபர் ஒருவர் பகிரங்கமாக அச்சுறுத்தினார்.​

யாழ்.பெண் ஊடகவியலாளரை பகிரங்கமாக அச்சுறுத்திய நபர் | Jaffna Publicly Threatened Female Journalist

அந்த நபர், மீடியா, என்றால் மீடியா மாதிரி கத, மரியாதையா கதை தேவையில்லாத வேலை பார்க்காத, உங்க மாதிரி ஆட்களால்தான் நாடே நாசமாகிறது.

உங்கள மாதிரி ஆட்களால்தான் நாடே நாசமா போது, நீங்கள் எல்லாம் மீடியா இல்ல ஊர கெடுக்கும் ஆக்கள், என்று அந்த பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்தி விட்டு சென்றுவிட்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments