பலஸ்தீனத்தை (Palestine) அங்கீகரிக்க வலியுறுத்த கோரி இத்தாலியில் (Italy) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இதற்கு முன்பு ஆதரவு தெரிவித்து வந்த அவர் திடீரென்று தனது முடிவை மாற்றியுள்ளார்.

இதற்கு எதிராக இத்தாலி முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன ஆதரவாளர்கள்
இந்தநிலையில், பல்வேறு பலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மோதல்களில் 60 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், போராட்டங்களின் எதிரொலியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.