மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது நேற்றையதினம்(27) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனுடைய உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்கான திடீர்மரண விராணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார்.

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Body Of A Man Recovered In Kaluwanchikudy

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியைச் சேரந்த 2 பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடைய கணபதிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments