யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த அ.சயேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் குருநகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் நேற்றையதினம் காலையும், மதியமும் உணவு கொண்டு சென்று கொடுத்துள்ளார்.
அறையில் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு
பின்னர் நேற்றிரவு (27) அங்கு சென்றவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார். அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.