மொனராகலை, படல்கும்புரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹமட பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நேற்று (30) அன்று இடம்பெற்றுள்ளது.

படல்கும்புரை, மீகஹமட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளம் இராணுவ அதிகாரியின் உயிரை பறித்த தொலைபேசி அழைப்பு ; கதறும் கர்ப்பிணி மனைவி | Young Army Officer S Atrocity Pregnant Wife Cries

தொலைபேசி அழைப்புகள் 

குறித்த நபருக்கு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு ஒருவர் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை விடுத்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த அவர், தான் வேலை செய்யும் இராணுவ முகாமுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் முகாமுக்குச் செல்லாததால் அவரை தேடிய போது வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரமொன்றில் இருந்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரரின் மனைவி கர்ப்பமாக உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து படல்கும்புரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments