திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூதூரை சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் நடுவீதியில் குடும்பஸ்தருக்கு நடந்த துயரம் | Tragedy Strikes Family Man In Tamil Area

மேலதிக விசாரணை

பேருந்தில் இருந்து இறங்கி மஞ்சள் கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகி, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments