அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடும் நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.