புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆராச்சிக்கட்டுவ – பண்டாஹேன பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 396 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதுடைய கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.