மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

ஏரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி ஒருவர் உயிரிழப்பு | 65 Farmer Dies After Being Attacked Elephant

குறித்த விவசாயி சம்பவதினம் பிற்பகல் 11.00 மணிக்கு வயில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் அவர்படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது வீதியில் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments