யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் இன்று (24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.

யாழில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் | Youth Was Seriously Injured Shooting Jaffna Police

இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாலாவி தெற்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments