அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நடனமாடிய காணொளியொன்று தற்போது வைரலாகி வருகின்றது.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க டொனால்ட் ட்ரம்ப், மலேசியா (Malaysia) சென்றுள்ளார்.
இந்தநிலையில், காலை விமானம் மூலம் மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு டொனால்ட் ட்ரம்ப் சென்றுள்ளார்.
அங்கு அவரை மலேஷிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திரண்டு நின்று வரவேற்றுள்ளனர்.
இதன்போது, பாரம்பரிய நடனத்துடன் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, நடனக்குழுவினருடன் சேர்ந்து டொனால்ட் ட்ரம்பும் நடனமாடியுள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
