இலங்கையின் அரசியலில் தற்போது போதைபொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாகவும், அதன் வலைப்பின்னல்கள் தொடர்பாகவும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்திவருகின்றது.

குறிப்பாக வடமாகாணத்தில் இருக்ககூடிய பல இடங்களில் தேடுதல் வேட்டை இடம்பெற்றுவருகின்றது. அதுமட்டுமில்லாமல் பலதொகை போதைப்பொருட்கள் கடற்பரப்பில் பிடிக்கப்படுவதையும் அவதானிக்ககூடியதாக உள்ளது.

இவற்றை பார்க்கின்ற போது இலங்கை அரசாங்கம் இந்தவிடயத்தில் முழுமையடையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தநிலையில் 2000ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் வடபகுதி இவ்வாறான போதைபொருள் கைமாற்றும் இடமாக மாறியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ்தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், போதை பொருள் நடவடிக்கைகளை பொறுத்தவரையில் கூடுதலாக வடபகுதிகளினூடாகவே எடுத்துவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் எதுவும் வருவதாக இருந்தால் இந்தியாவை தாண்டிவர முடியாது. இலங்கையின் எந்த பகுதிக்குள் யார் வந்தாலும் இந்திய கடற்படையினரின் ரடாரை தாண்டி வர முடியாது என குறிப்பிட்டார்.

மேலும், இலங்கைக்குள் நுழைந்த சீனாவின் திடீர் நகர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்புநிகழ்ச்சி….

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments