காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அஹுங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
சந்தேகநபரான உறவினர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
