ஹொரணையிலிருந்து மொரகஹஹேன நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று திடீரென வீதியில் கவிழ்ந்து அருகில் வந்த காரொன்றுடன் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ஹொரண வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
