வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கணவர், குழந்தையுடன் இருந்த பெண்

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வவுனியாவில் கொடூரம் :கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப்பெண் சடலமாக மீட்பு | Body Of Young Housewife Found Murdered In Vavuniya

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தவேளை தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்பு

சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கொடூரம் :கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப்பெண் சடலமாக மீட்பு | Body Of Young Housewife Found Murdered In Vavuniya

சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments