யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காக இந்திய படையினர் மேற்கொண்ட ஒப்ரேசன் பவான் என்ற இராணுவ நடவடிக்கை 45 நாட்களாக இடம்பெற்றது.

பலாலி, காங்கேசன்துறை பண்ணடத்தரிப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலிருந்தும் விமானத்தரை இறக்கம், கடல் மூலமான தரையிறக்கம் என்று பல முனைகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நடவடிக்கை மிகவும் மூர்க்கமாக இடம்பெற்றிருந்தது.

நான்கு நாட்களில் நிறைவுப்பெற்றுவிடும் என்று எதிர்ப்பார்த்த ஒப்ரேசன் பவான் இராணுவ நடவடிக்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் கடுமையான எதிர்ப்பு காரணமாக 45 நாட்களாக தொடர்ந்தது.

இலங்கை வரலாற்றிலே 35 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு குறித்த நடவடிக்கை இடம்பெற்றது.

கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றார்கள், சொந்த நாட்டிலேயே தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள்.

சாதாரண இந்திய படைவீரர்கள் தமக்கு கிடைக்கும் கட்டளைகளின் அடிப்படையிலே எந்த காரியங்களையும் செய்யும் ஒரு தரப்பினர்களாகவே இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது அவலங்களின் அத்தியாயங்கள்..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments