மாவீரர்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால் மக்கள் அச்சமின்றி நினைவு கூருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் சாம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, மற்றும் சட்டவிரோத கடற்றொழில்கள் தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

வடமராட்சி கிழக்கில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் மண் கொள்ளை பகல் இரவாக இடம்பெறுகின்றமை, சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பாக அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்தும் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களை நினைவு கூருதல்

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அரச இயந்திரமான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறுகின்றனர், நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் பலர் அதனை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து NPP தரப்பு வெளியிட்ட அறிவிப்பு | Action To Who Involved In Illegal Activities Npp

அவர்கள் மிக விரைவில் அகற்றப்பட்டதும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர்கள் மிக விரைவில் அகற்றப்படுவார்கள்.

மாவீரர்கள் தொடர்பில் எமது அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் நல்ல தீர்மானம் எடுத்திருக்கின்றது, இதனால் மக்கள் அச்சமின்றி இறந்தவர்களை நினைவு கூருவார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments