இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்போது, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான கார் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. 

வெடிப்பைத் தொடர்ந்து இந்திய தலைநகர் முழுவதும் காவல்துறை உடனடியாக உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி தீயணைப்பு சேவைகள் மற்றும் காவல்துறை தற்போது தொடர்புடைய இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடங்கியுள்ளன.

இந்நிலையில்,, குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் சாதாரண விபத்தா அல்லது பயங்கரவாதச் செயலா என இன்னும் கண்டறியப்படாத நிலையில், அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்தச் சம்பவம் மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments