காலத்தின் சரித்திர நாயகர்கள் மாவீரர்கள் பல சவால்களையும் வென்று
பணிமுடித்த புனிதர்கள்
தமிழீழ விடிவிற்காய் உயிர் நீத்த உத்தமர்கள்
களமாடி பகை முடித்து
கல்லறையில்த் துயில்கின்ற நீசர்கள்
தாயக மண் மீட்புக்காய் தலைவன் படை அமைத்த போது அண்ணன் வழி சிறந்த தென்று வழி தொடர்ந்தவர்கள் மாவீரர்கள் முப்பத்து மூன்று ஆண்டுகளாய் வீறுகொண்டெழுந்த அண்ணனின் அறப்போரில் வெஞ்சமராடி வீரசாதணை புரிந்து நின்ற மறத்தமிழ் வேங்கைகள்
ஈழம் மலர்வதற்காய் கலங்கரை விளக்காகி பகை அழித்து வழி அமைத்த வழிகாட்டிகள் தமிழன் என்கின்ற ஒவ்வொருவரின் விடிவிற்காகவுமே விடிவெள்ளியாய் உதித்து என்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் ஒளி விளக்குகள்
வெஞ்சமராடிய வீரர்கள் சிந்திய செங்குருதியில் மீண்டு வர வேண்டும் தமிழீழம் என்று விதைக்கப்பட்டவர்கள் வித்துடல்கள் தாங்கிய கல்லறையில் புஸ்பங்களாய் மிளிர்பவர்கள் மாவீரர்கள்
ஈழவிடுதலைக் கனவு சுமந்தவர்கள். இறுதி வரைக் களமாடி எதிரியின் கொட்டமடக்கி தங்களின் இன்னுயிர்களை மண்ணுக்காய் அர்ப்பணித்தவர்கள். நாளை தங்களின் தேசம் மலர வேண்டுமென தமிழீழ மண்ணுக்கு உரமாகிப் போனவர்கள்
சாதனை பல புரிந்து தாயக விடுதலையில் ஆகுதியாகி வித்துடலாய் விதைக்கப்பட்ட வீரர்களை
விளக்கேற்றி நினைவு கொண்டு பூஜிக்கும் புனித நாளாம்
மாவீரர் நாள்
எல்லோர் இதயங்களிலும்
நிறைந்து நிற்பவர்கள்
மனமுருகி அவர்கள்
தியாகங்களைப் பூஜித்து
அவர்கள் வெற்றித் தடம் போற்றி வணங்குகின்றோம்
முற்றும்
ஆக்கம்: ஈழமதி




good