மா வீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி
வருகின்றோம்..


காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி
தேச மாந்தர் உமைக் காண தேடி நாங்கள் வருகின்றோம்.

எங்களுக்காய் உயிர் துறந்தீர். எங்களுக்காய்
களம் சென்றீர். எதைக் கொண்டு உங்கள் ஈகமதை ஈடு செய்வோம்.

வானம் கூட அழுது தீர்க்கிறதே! வங்கக் கடல் அலைகள் எழுந்து மறவர் உம் ஈகத்தை இயம்பி நிற்கிறதே!
இதயங்கள் இறுகிப் போகிறதே! உங்கள் இலட்சிய கனவுகள்
ஈழக்காற்றில் கலந்து
நிற்கிறதே!

கல்லறைகள் எங்கள்
கருவறைகள் ஆகும்..
அங்கே கடவுளராய்
நீங்கள் துயில் கொள்ள வேண்டும். காலம் ஒரு நாள் மாறும்…
உங்கள் இலட்சிய வேட்கை எங்கள் ஈழத்தை நிரப்பும்.
எம் மாவீரர்கள் இலட்சிய வேட்கை ஈழத்தை நிரப்பும்.

எழுத்து -வன்னியூர் ஆர்.ஜெ. கலா

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments