சூடானில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடான் மத்திய கோா்டோஃபான் பகுதியில் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுபடுகின்றது.
கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் படை
இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடா்பான பாதிப்புகளால் உயிரிழந்தன.
இந்தப் பகுதியில் இராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகின்றது.
இதனால் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது
